யாழ். ராஜா திரையரங்கு ஒரு காலத்தில் ரஜினி படம் என்றால் கதிகலங்கிவிடுவதுண்டு.. அது போல தர்பார் படமும் புதிய தர்பார் வகிக்கும் என்று நம்பியவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்துள்ளது.
வெறும் 20 பேர் மட்டுமே வந்தார்கள்..
முதலாவது காட்சிக்கு பால் அபிசேகம், பியர் அபிசேகம் என்று கொடி கட்டிய ரஜினியின் எழுச்சி முடிவடைந்து வருவதை இந்த 20 பேரும் காட்டுகிறார்கள்.
பொதுவாக ரஜினி படங்கள் மிகமிக வீழ்ச்சி போக்கையே கடந்த காலங்களில் காட்டுகின்றன. தனுஸ் படத்திற்கு வரும் மக்கள் கூட்டம் கூட ரஜினி படத்திற்கு இல்லை.
இந்த நிலையில் ரஜினி தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழக்கும் நிலையே காணப்படுகிறது.
அவர் இப்போது தமிழக முதல்வர் பதவியை பிடிப்பதைவிட தனது திரையுலக முதல்வர் இடத்தை தக்க வைக்க ஓடுகிறார்.. தொடர்ந்து நடிக்கிறார்..
ஆனால் ரஜினியின் வெற்றி அவர் எதிர்பாராமல் வந்தது.. அவரால் அதை தடுக்க முடியவில்லை.. காலம் அவரை அலேக்காக தூக்கியது. இப்போது வீழ்ச்சியை தடுக்க ஓடுகிறார்.. ஆனால் எப்படி வெற்றியை தடுக்க முடியவில்லையோ அதுபோல அவருடைய வீழ்ச்சியையும் இனி தவிர்க்க முடியாது என்பதற்கு சான்றானது தர்பார்.
சில்க் ஸ்மிதா படத்தை ரஜினி ஒரு தடவை பார்க்க வேண்டும்..
வினை விதைத்து தினை அறுக்க முடியாதல்லவா..?
அலைகள் 09.01.2020