இலங்கை செய்திகளின் சுருக்கம்.. 08.04.2020

அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 200.46 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை ரூபா வெறும் கடதாசியாகிறது. இலங்கையில் இருந்து வட்டி எடுக்க பணம் போட்ட புலம் பெயர் தமிழரின் பணம் ஆற்றில் கரைத்த புளியாக கரைகிறது.
—–

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் நேற்று (07) காலை 6.00 மணி முதல் இன்று (08) காலை 6.00 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் 1,815 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 595 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம், கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையான காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 4,586 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
—–

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (09) பிற்பகல் 1.00 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய (கொழும்பு 09, 14) தெமட்டகொடை, கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளிலும் நவகம்புர பகுதியிலும் குறித்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts