கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சிக்கு ரூ. 25 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக அளித்துள்ளார்.
அண்டை மாநிலங்களான கேரளாவுக்கு ரூ. 10 லட்சம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். தனது ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.