கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. காஷ்மீர் சுகாதார சேவைகளுக்கான இயக்குநர், டாக்டர் சமீர் மட்டூ, பந்திபோரா நகரில் உள்ள பல்வேற மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு ஆய்வு செய்ய சென்றுள்ளார்.
இதன்பின் அவர், கொரோனா நோயாளிகள் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடுவதற்கான சாத்திய கூறுகளை பற்றி கூறியுள்ளார். அவர் கூறும்பொழுது, மருத்துவமனையில் தனி வார்டில் இருந்த மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் இருந்த கொரோனா பாதித்த நோயாளிகளை சந்தித்து பேசினேன்.
இதில், சுகாதார நல பணியாளர்களின் நல்ல அணுகுமுறை மற்றும் கவனிப்பு ஆகியவற்றால் விரைவில் குணமடைந்து வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.
இது நம் அனைவருக்கும் அதிக மகிழ்ச்சி அளிக்கும் தருணம். மருத்துவர்களின் கவனிப்பு வாழ்வில் மறக்க முடியாதது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் அளப்பரிய சேவைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என்னிடம் கூறினர் என்று கூறினார்.
அதனால் மனிதர்கள் தொட்டு கவனித்து கொள்ளும் சூழலில், கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைந்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனோ நோயாளிகளுக்கு தேவையான சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் வழங்கும்படியும் தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்களுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.