தமிழ்த் திரையுலகில் நேரடியாக டிஜிட்டலில் வெளியாகும் 3-வது படமாக அமைந்துள்ளது ‘அந்தகாரம்’
‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து, ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் அட்லி. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு, கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்கப் பணிகளுக்கு இடையே தனது தயாரிப்பில் உருவான அடுத்தப் படத்தை அறிவித்தார் அட்லி.
அந்தகாரம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுசி சித்தார்த் இயக்கியுள்ள படத்தின் ஒளிப்பதிவாளராக அமுதன் பணிபுரிந்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ‘அந்தகாரம்’ படத்தைப் பார்த்தவர்களும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்கள்.
இதனிடையே, அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு காத்திருந்தது ‘அந்தகாரம்’. அதற்குள் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற சூழலே தெரியாமல் இருப்பதால், இந்தப் படத்தை டிஜிட்டலில் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.
‘அந்தகாரம்’ படத்தை நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எப்போது வெளியிடப்பட்டும் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, டிஜிட்டலில் நேரடியாக வெளியாகும் 3-வது படமாக அமைந்துள்ளது ‘அந்தகாரம்’.அந்தகாரம்’ படத்தினை அட்லியுடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டலில் வெளியாகும் அடுத்த தமிழ்ப் படம்
