தன்னம்பிக்கை எப்படி உதவும் என எடுத்து காட்டியவர் தோனி

வாழ்க்கை மற்றும் விளையாட்டில் சாதிக்க தன்னம்பிக்கை எப்படி உதவும் என எடுத்து காட்டிய தோனிக்கு நன்றி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்து உள்ளனர். அவருக்கு பல்வேறு பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் மற்றும் பிரபலங்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இதுபற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வாழ்க்கை மற்றும் விளையாட்டில் சாதனை மேற்கொள்ள தன்னம்பிக்கை எப்படி உதவுகிறது என எடுத்து காட்டிய அன்பிற்குரிய தோனி அவர்களுக்கு நன்றி. ஒரு சிறிய நகரத்தில் இருந்து வந்து தேசத்தின் நாயகனாக உயர்ந்து உள்ளீர்கள்.

தோல்வியை தவிர்க்க முன்பே திட்டமிடுதல் மற்றும் அமைதியான உங்களது போக்கு ஆகியவற்றை இந்திய அணி தவறவிடும். சென்னை உடனான உங்கள் காதல் கதை தொடர்வதில் மகிழ்ச்சி என அதில் தெரிவித்து உள்ளார்.

Related posts