சூர்யா நடித்து கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் ஆகிய படங்கள் வந்தன. தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வருகிற 30-ந்தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் விமான படையில் இருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ் தாமதமாக கிடைத்ததால் தள்ளி வைத்துள்ளனர். தீபாவளியையொட்டி ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 39-வது படமாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து தயாராகிறது. இந்த நிலையில் சூர்யா நடிக்கும் 40-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. பாண்டிராஜ் குடும்ப பாங்கான படங்கள் எடுத்து பெயர் வாங்கியவர். சூர்யா படத்தையும் அதே பாணியில் எடுப்பார் என்று தெரிகிறது. கடந்த வருடம் இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நம்மவீட்டு பிள்ளை படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் நின்று போனது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
