வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் உருவாகவுள்ள படத்தின் நாயகனாக சசிகுமார் நடிக்கவுள்ளார்.
‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்புக்காகத் தயாராகி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.
இதனிடையே, சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் வெற்றிமாறன். இந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தை வெற்றிமாறனிடம் பணிபுரியும் உதவி இயக்குநர் யாரேனும் ஒருவர் இயக்குவார் எனத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (நவம்பர் 4) வெளியிடப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தைத் தயாரித்தவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக் உரிமையும் கதிரேசனிடம்தான் இருக்கிறது. பலரும் இதுகுறித்த அறிவிப்பு தான் இருக்கும் என்று கருதினார்கள். ஆனால், புதிய படத்தைக் கதிரேசன் அறிவித்துள்ளார்.
வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் சசிகுமார்
