படப்பிடிப்பில் உள்ள சித்த மருத்துவக்குழுவில் நடிகர் சிம்பு கசாயம் குடித்து ஆவி பிடிக்கிறார்.
சிம்பு ஈஸ்வரன் படத்தை முடித்து விட்டு மாநாடு படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. இதில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றனர். பாரதிராஜா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், டேனியல் ஆகியோரும் உள்ளனர். வெங்கட் பிரபு இயக்குகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
கொரோனாவில் இருந்து படக்குழுவினரை பாதுகாக்கும் பொறுப்பை சித்த மருத்துவர் வீரபாபுவிடம் படக்குழுவினர் ஒப்படைத்துள்ளனர். படப்பிடிப்பில் 4 பேர் கொண்ட சித்த மருத்துக்குழுவினர் பணியாற்றுகிறார்கள். அவர்கள் சிம்பு, கல்யாணி உள்பட படத்தில் நடிப்பவர்களுக்கும் தொழில்நுட்ப குழுவினருக்கும் தினமும் காலையும் மாலையும் மூலிகை கசாயம் கொடுக்கின்றனர். ஆவி பிடிக்கவும் வைக்கிறார்கள். ஆரோக்கியமான உணவும் வழங்கப்படுகிறது. கொரோனா முன் எச்சரிக்கையாக சித்த மருத்துவக் குழு கண்காணிப்பில் படப்பிடிப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கசாயம் குடித்து ஆவி பிடிக்கும் நடிகர் சிம்பு
