யாழ் பெரியாஸ்பத்திரியில்..
நோயாளி : டாக்டர் புண் மாறியிருச்சு .. ஆனா நீங்க அதுக்கு மேல ஒட்டின பிளாஸ்டரை மூணு மாதமா உரிக்க முடியல்லே ..
டாக்டர் : அதற்கான கருவிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் இல்லை.. கொழும்புதான் போகணும் .. போதனா வைத்தியசாலைன்னா போதனை மட்டும்தான் .. போ .. போ .. நெக்ஸ்ற்..
————–
மணமகள் : அப்பா வெளிநாட்டு மாப்பிளய கட்டி வைச்சீங்க அவர் முதலிரவில தூங்க விடாம “ கறுப்பு “ இருக்கா “ கறுப்பு “ இருக்கான்னு தொல்லைப்படுத்துறார் .. கறுப்பென்னா என்னப்பா ..?
தகப்பன் : அட ! அப்பிடியா ., மாப்பிள உனக்கு “ கற்பிருக்கா “ என்னு கேட்டிருக்காரும்மா ..
—————-
ஒருவர் : லண்டன் மாப்பிளயா ?இருந்தாலும் தமிழ் பெண்ணுதான் வேணுமென்று பிடிவாதம் பிடிக்கிறாரே ?
தரகர் : என்ன செய்ய சின்ன வயதில தமிழை படிக்காம விட்டிட்டாரு இப்ப மூணு மாத்த்தில தமிழ் படிக்கிறதா சபதமெடுத்திருக்கிறார் ..
மற்றவர் : ஓகோ “ மூன்று மாதத்தில் தமிழ் “ விரைவு கோஸ் என்றால் இதுதானோ ..?
ஒருவர் : மூணு மாதம் முடிய ..?
தரகர் : மணமகள் ஒரேயொரு ஆங்கில சொல்லை படித்தாலே போதும் ..
மற்றவர் : என்ன சொல் ?
மற்றவர் : “ டிவோஸ் “
—————-
தரகர் : மாப்பிள… ” குத்து சண்டை வீரன் ” ஓகே .. கட்டாயமா தமிழ் பெண் தான் கேக்கிறீங்க சபாஷ்..! ஆனா பொண்ணு ஓட்டப்போட்டியில கண்டிப்பா கோல்ட் மெடல் எடுத்திருக்கணும் என்று பிடிவாதம் பிடிக்கிறீங்களே.. எதுக்கு ?
மணமகன் : அப்பதான் விரைவா ஓடிடுவா ..
—