கதாநாயகர்கள் இடையே போட்டியும், மோதல் மனப்பான்மையும் இருந்தது. அதனால் ஒரு கதாநாயகனுடன் இன்னொரு கதாநாயகன் இணைந்து நடிக்க தயங்கினார்கள்.
தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டம் வரை கதாநாயகர்கள் இடையே போட்டியும், மோதல் மனப்பான்மையும் இருந்தது. அதனால் ஒரு கதாநாயகனுடன் இன்னொரு கதாநாயகன் இணைந்து நடிக்க தயங்கினார்கள். காலப்போக்கில் போட்டியும், மோதல் மனப்பான்மையும் படிப்படியாக குறைந்து வந்தன. இப்போது மார்க்கெட்டில் உள்ள இளைய தலைமுறை கதாநாயகர்கள் நட்புடன் பழகி வருகிறார்கள். சகோதர மனப்பான்மையுடன் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். இந்த மாற்றம், ‘மல்ட்டி ஸ்டார்’ படங்கள் உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் ஆரோக்கியமான காலகட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இதற்கு ‘சின்னத்திரை’ நாயகர்கள் சிலர் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இந்த நிலையில், ‘சின்னத்திரை’யில் ‘பூவே உனக்காக’ தொடரில் நடித்து வரும் ஜோவிதா, ராதிகா பிரீத்தி ஆகிய 2 கதாநாயகிகள் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. ஒருவர் மீது ஒருவர் புகார் செய்து வருகிறார்கள். இவர்களில் ஜோவிதா, நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஆவார். ராதிகா பிரீத்தி கர்நாடகாவை சேர்ந்தவர்.
‘சின்னத்திரை’யில் 2 கதாநாயகிகள் இடையே கடும் மோதல்
