நடிகர் ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்தப்படியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த்ராவ் டைரக்சனில் ‘நெற்றிக்கண்’ படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வந்தார். இந்த படமும் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது. ‘நெற்றிக்கண்’ படம் ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரியன் படமான ‘பிளைன்ட்’ படத்தின் கதையை தழுவி தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. இதில் நயன்தாரா கண் பார்வை இல்லாதவராக நடித்து இருக்கிறார். ஒரு சைக்கோ கொலைக்காரனை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படம் ரூ.25 கோடிக்கு விற்பனை
