ஒரே வருடத்தில் சிம்புவிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் என்பது பலருடைய வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. கரோனா முதல் அலை தொடங்கியபோது, படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பிரபலங்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள்.
அந்தச் சமயத்தில் சிலம்பரசன் சமைக்கும் வீடியோ ஒன்று வெளியானது. அப்போது உடல் இளைக்காமல் இருந்தார். மேலும், அவரது அம்மா ஊட்டிவிடும் வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டானது. அதற்குப் பிறகுதான் முழுமையாக உடல் எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்தினார்.
தற்போது கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறையத் தொடங்கி இருக்கிறது. இந்தச் சமயத்தில் சிலம்பரசனின் மற்றொரு சமைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் கெட்டப் எல்லாம் மாற்றிச் சமைத்தார். சுமார் 48 விநாடிகள் கொண்ட வீடியோவாக இது அமைந்துள்ளது.
ட்விட்டர் தளத்தில் கடந்த ஆண்டு வீடியோவையும், தற்போதைய வீடியோவையும் வைத்துப் பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரே ஆண்டில் முழுமையாக இந்த அளவுக்கு மாறியிருக்கிறார் என்று இரண்டு புகைப்படங்களையும் வைத்துப் பகிர்ந்து வருகிறார்கள்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிலம்பரசன். விரைவில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனை முடித்துவிட்டு ‘பத்து தல’ படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.
ஒரே வருடத்தில் சிம்புவின் மாற்றம்
