வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி செய்தார்.இந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தர்ப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
மேலும் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த ஐகோர்ட் அபராத தொகையை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவிட்டது.
நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.வரி என்பது நன்கொடையல்ல; நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு.
சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என ஐகோர்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது.