இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 175 மரணங்கள் நேற்று (08) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 10,689 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 175 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 10,864 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.
இவ்வாறு மரணமடைந்த 175 பேரில், 96 பேர் ஆண்கள், 79 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 139 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
——
கொவிட்-19 தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
கொழும்பு டி சொய்சா மகப்பேற்று போதனா வைத்தியசாலையில் வைத்து இப்பிரசவம் இடம்பெற்றுள்ளதோடு, 27 வயதான நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாயும் மூன்று குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் கொரோனோ தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித் தாயொருவர் ஒரே சூலில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட் கர்ப்பிணிக்கு ஒரு பிரசவத்தில் 3 குழந்தைகள்
