சர்வதேசத்தின் தலையீட்டுடன் தான் எமக்கான இனப்பிரச்சினக்குத் தீர்வு கிடைக்கும்.அரசாங்கம் இன்று நேற்றல்ல சுதந்திரம் பெற்ற காலம் முதலே சர்வதேசத்திற்கும் இலங்கை மக்களுக்கும் மாறுபட்ட கருத்துக்களைத்தான் கூறிவருகின்றது.
இவர்களை நாங்கள் நம்பத் தயாரில்லை.எங்களுடைய தலை விதியை தீர்மானிக்கக்கூடிய விதத்தில் சர்வதேசத்தின் தலையீடைக் கோரி ஒரு பொதுசன வாக்கொடுப்பின் மூலம் தான் பிரச்சினைக்குத் தீர்வென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சர்வதேசத்தின் வகிபாகம் அவசியமில்லை. அது அரசியலமைப்புக்கு முரணானதென கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,..
இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்களப் பெளத்த தலைமைகள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றார்கள்.
அது மாத்திரமல்ல வெளிநாடுகளையும் அந்த ஏமாற்றத்துக்குள் நம்ப வைத்து அவர்களையும் ஏமாற்றி வருகின்றார்கள்.