சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.
சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ஒன்றை பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்துக்கு ‘ரைட்டர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ப்ராங்க்ளின் ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளராக ப்ரதீப் காளிராஜா, எடிட்டராக மணிகண்டன் சிவகுமார் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. ‘ரைட்டர்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
