முடிவையும் அறிந்தவர் !
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
அதுமுதல் இயேசு தாம் எருசலேமுக்குப்போய் மூப்பராலும் பிரதான ஆசாரியராலும்வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு கொலையுண்டு மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும்என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச்
சொல்லத்தொடங்கினார். மத்தேயு 16.21
இன்று முழு உலகமும் கதிகலங்கி என்ன சம்பவிக்கும் எனவும் தமது நாடும் மக்களும் எப்படியாக இருக்கப்போகிறார்கள் என பயந்து என்ன செய்வது என தெரியாமல் கலங்கி நிற்பதைக்காணக்கூடியதாக உள்ளது. இயேசுவின் பிறப்புக்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாக சாலமோன்என்னும் ஞானி இவ்விதமாக கூறியுள்ளான். “இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அதுஇன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?” பிரசங்கி 8.7
அடுத்த நிமிடம் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது. வியாதி வந்தால் வேதனைகொடுக்கும் என்பது தெரியும். ஆனால் வியாதி வருமா வராத என்பது யாருக்குத் தெரியும்? மரணம்வரும் என்பது தெரியும். ஆனால் அது எப்படி. எப்போது சம்பவிக்கும் என்பது யாருக்குத் தெரியும்? குருத்தோலைகளைப் பிடித்து ஆர்பரித்தபோது இயேசுவை ராஜாவாகக் கொண்டாடியவர்களுக்குஅடுத்து என்ன நடக்கும் என்றோ தாமே அவரைச் சிலுவையில் அறையக் கொடுக்கப் போகிறோம்என்பதையோ அறிந்தவர்களாகவா இருந்தார்கள்?
ஆனால் இயேசுவே சகலத்தையும் அறிந்திருந்தார். தனக்கு என்னவாகும் என்பதை முன்கூட்டியேஅறிந்திருந்தார். எருசலேமுக்குப் பயணமானபோது இதுதான் தமது கடைசிப் பயணம் என்பதைஅறிந்திருந்தார். தமக்கு முன்னும் பின்னும் ஆர்பரிக்கின்ற மக்களே தம்மை நிராகரிக்கப்போகிறாரகள் என்பதையும் அறிந்திருந்தார். அதற்காக இயேசு பிதாவின் சித்தத்தில் இருந்துபின்வாங்கிப் பேகவில்லை. இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமா என இயேசுஜெபித்தபோது வேளை வந்துவிட்டது என்பதை அறிந்திருந்தார். ஆயினும் அவர் ஒளித்துஓடவில்லை. அவர் தமது சரீரவேதனையையோ மனவேதனையையோ நினைத்துப் பார்க்கவில்லை. தம்மேல் சுமத்தப்படவிருந்த பாவத்தின் அகோரத்தனத்தை நினைத்தே மனம் கசந்து ஜெபித்தார். ஆனாலும் தேவசித்தத்திற்கு தம்மை ஒப்புக்கொடுக்க அவர் தவறவில்லை. ஆம் ஆண்டவர்எல்லாவற்றையும் அறிந்திருந்தார். நம்மையும் நமக்கு நேரிடப்போவதைப்பற்றியும்கூட அவர்அறிந்திருக்கிறார். மரணத்திலிருந்து உயிர்தெழுந்த தேவனின் கரங்களில் இருக்கும் நாம் ஏன் இனிகலங்கித்தவிக்க வேண்டும். நமக்கு இன்னது நடக்கும் என்பது தெரியாதிருந்தாலும் அனைத்தையும்தெரிந்தவர் கைகளில் நாம் இருக்கும் வரைக்கும் நமக்கு ஏன் கலக்கம்?
தேவபிள்ளையே இந்தப் பரிசுத்த வாரத்தில் ஆண்டவர் இயேசுவின் மனநிலையை சற்றுதியானிப்பது நல்லது. ஆம் எந்தவொரு சூழ் நிலைக்குள் தள்ளப்பட்டபோதும் எல்லாவற்றையும்அறிந்திருந்தும் பின்வாங்கிப் போகாமல் வெற்றிசிறந்த ஆண்டவர் நம்மோடிருக்கிறார் என்பதைமறவாதிருப்போமாக. நம்முடிவையும் அறிந்தவராகையால் நமது பொறுப்பை அவரிடம்விட்டுவிடுவோமாக. ஏற்றவேளையில் ஏற்ற பெலத்தைத் தந்து அவர் நம்மை வழிநடத்துவார். அவரேசகலத்தையும் அறிந்தும் இருக்கிறார்.
அன்பின் பரலோக பிதாவே இந்த தியானத்தை பலவிதமான சோதனைகள் மத்தில்இ எப்படிஎதிர்காலம் முடியம் என்ற பயத்தில் தியானித்தவர்களுக்காகவும் உமது பாதம் வருகிறேன் அப்பா. அவர்களின் கலக்கம் நீங்கி அமைதியுடன்கூடிய ஆறுதலைக்கண்டு கொள்ள கிருபைதாரும் நல்லபிதாவே ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark