ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சௌதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான SV-788 என்ற விமானத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளனர்.
—–
வன்முறைகளில் இருந்து விலகி அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அனைத்து வன்முறைகளையும் கண்டிப்பதாகவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்துத் தரப்பினரும் அமைதியான முறையில் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.