நெல் கொள்வனவு செய்வதற்கு அரச வங்கிகளில் போதிய பணம் கிடைக்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பணம் கிடைத்தவுடன் அரிசி கொள்வனவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அநுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நெல் கொள்வனவு செய்வதற்கு இரண்டு பில்லியன் ரூபாவை வழங்குமாறு இரண்டு அரச வங்கிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு எழுத்துமூல அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமரவீர, விவசாயிகளுக்கு நிலத் தயாரிப்பு போன்றவற்றுக்குத் தேவையான எரிபொருள் முதலியவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.