ஐசரி கணேஷ் தயாரித்து, கவுதம் வாசுதேவ் டைரக்ஷனில், சிம்பு கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியதாவது:- “வெந்து தணிந்தது காடு படம், தமிழ்நாட்டை தாண்டி பல இடங்களில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு, கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்.
அவருடைய நடிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்காக அவர் தேசிய விருது வாங்குவார். படத்துக்காக அவர் கடினமாக உழைத்தார். டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் அவருடைய பாணியில் இருந்து மாறுபட்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
‘வெந்து தணிந்தது காடு’ இரண்டாம் பாகம் விரைவில் தயாராகும். அதற்கான பணிகள் நடைபெறுகிறது”.
சிலம்பரசன் கூறும்போது, “என் படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளிவந்தது, இதுதான் முதல்முறை. படத்துக்காக நான் ஒல்லியாக மாறினேன். அதனால் என் உருவத்தை யாரும் கேலி செய்யவில்லை. உருவத்தை கேலி செய்யக்கூடாது” என்றார்.
வெந்து தணிந்தது காடு 2-ம் பாகம் விரைவில்
