மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழகத்துக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கமல் – சிறீதரன் சந்திப்பு
