கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் ‘இஷ்க்’.
தற்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.
இந்த படத்தை ‘ஜீரோ’ புகழ் ஷிவ் மோஹா இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடிக்கிறார்.
இந்த படத்துக்கு 1995-ம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் சுவலஷ்மி நடிப்பில் வெளியான ‘ஆசை’ படத்தின் டைட்டிலை வைத்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகை பூர்ணா, லிங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு ரேவா இசையமைக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
சுதர்சன் படத்தொகுப்பு செய்கிறார். ‘ஆசை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘காதல் கண்ணாடி’ என்ற இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார்.
கபில் கபிலன், ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளனர்.
இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ஆசை’ படத்தின் முதல் பாடல் வெளியானது..!
