‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பர்ஹானா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘பர்ஹானா’ திரைப்படம் நேற்று (மே 12) திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘பர்ஹானா’ திரைப்படத்தை நடிகர் கார்த்திக் பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் நமது உறவுகளில் அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. ‘
பர்ஹானா’ திரைப்படம் முழு அனுபவத்தையும் தீவிரமாக படம்பிடித்துள்ளனர். அழகான உரையாடல்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பு அருமை. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
பர்ஹானா படக்குழுவினருக்கு கார்த்தி பாராட்டு
