இந்தி திரையுலகின் மூத்த நடிகை ஹேமமாலினி ஒரு காலத்தில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
பின்னர் இந்தி நடிகர் தர்மேந்திராவை காதலித்து 1980-ல் திருமணம் செய்து கொண்டார்.
ஹேமமாலினியை மணக்கும்போது தர்மேந்திராவுக்கு பர்காஷ் கவுர் என்பவருடன் திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே தன்னுடன் நடித்த ஹேமமாலினியை அவர் 2-வது திருமணம் செய்து கொண்டார்.
ஹேமமாலினிக்கு இஷா, அஹானா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
ஹேமமாலினி தற்போது தர்மேந்திராவை பிரிந்து வாழ்கிறார். ஆனாலும் விவாகரத்து செய்யவில்லை.
தர்மேந்திரா முதல் மனைவி மற்றும் அவரது மகன்களுடன் வசிக்கிறார்.
இதுகுறித்து ஹேமமாலினி அளித்துள்ள பேட்டியில், “நான் கணவர் தர்மேந்திராவுடன் சேர்ந்து வாழவில்லை.
அவரிடம் இருந்து விலகி இருப்பதற்காக வருத்தப்படவும் இல்லை.
வாழ்க்கை நாம் நினைப்பதுபோல் இருக்காது.
எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனது மகள்களை நல்லபடியாக வளர்த்து இருக்கிறேன்.
அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தேன். தர்மேந்திரா எப்போதும் இஷாவுக்கும், அஹானாவுக்கும் நல்ல தந்தையாக இருந்து இருக்கிறார்” என்றார்.
தர்மேந்திராவை பிரிந்த ஹேமமாலினி விளக்கம்
