‘விக்ரம்’ வசூலை முறியடித்த ரஜினியின் ‘ஜெயிலர்’

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயிலர்’ திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

‘ஜெயிலர்’ உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிசில் ரூ.400 கோடியைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஜெயிலர்’ திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையிலும் வரவேற்பு குறையவில்லை. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் ‘ஜெயிலர்’ ரூ.15 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

இது ஒரு வார நாளில் மிக அதிகம். கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலையும் இப்படம் ஏழு நாட்களில் முறியடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் ரூ.225.65 கோடி வசூலித்து உள்ளது.

இந்தியாவைத் தவிர, உலக அளவில் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அமெரிக்காவில் ‘கபாலி’ வசூலை தாண்டியுள்ளதாக வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் எந்திரன் 2.0, பொன்னியின் செல்வன் 1 ஆகிய படங்களுக்கு அடுத்த படியாக 3வது இடத்தில் ஜெயிலர் திரைப்படம் உள்ளது என கூறி உள்ளார்.

Related posts