தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளர் நடிகர் விஜய். அதற்காக அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னை வெள்ள பாதிப்பு சரியாவதற்குள், டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் அதிகனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது.
இதனால், பலர் தங்களது வீடுகளை இழந்தள்ளனர். மேலும், இந்த 4 மாவட்டங்களில் விவசாய நிலங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அதேபோல், பொதுச் சொத்துகளும் சேதமடைந்துள்ளன. மக்கள் தங்களது வாழ்நாள் பொருளாதாரத்தை இயற்கையிடம் பறிகொடுத்துவிட்டு, நிற்கதியாய் போக்கிடம் இல்லாமல் நிற்கின்றனர். பல அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களால் முயன்ற உதவியை அப்பகுதி மக்களுக்கு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளையும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குமாறு நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நேரில் நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கேடிசி நகரில் 1000 பேருக்கு நிவாரணப் பொருட்களை நடிகர் விஜய் வழங்கவிருக்கிறார். இதையடுத்து, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்தை சென்றடைந்தார்.
நடிகர் விஜய் வெள்ளம் பாதித்த நெல்லை
