டிஜிட்டல் விற்பனையில் சாதனை புரிந்த கமல்

டிஜிட்டல் உரிமம் விற்பனையில் ‘தக் லைஃப்’ திரைப்படம் பெரும் சாதனை புரிந்துள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பினை ஒரே கட்டமாக ஒட்டுமொத்தமாக முடித்துவிட்டது படக்குழு. படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சமயத்தில் தேதிகள் குளறுபடியால் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் விலகி விட்டார்கள்.

அதற்கு பின்பு சிம்பு இணைந்து ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். இப்போது படப்பிடிப்பை முடித்துவிட்ட கையுடன், படத்தின் டிஜிட்டல் உரிமையையும் விற்றுவிட்டது படக்குழு.

இதனை உரிமையினை 149.7 கோடி ரூபாய்க்கு கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

இது தமிழ் படங்களில் அதிக விலைக்குப் போன டிஜிட்டல் உரிமை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இறுதி கட்டப் பணிகளை முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

Related posts