நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் 35 குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.