இலங்கையின் திறந்த பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும்போது மார்க்சிச ஜேவிபியின் செயற்பாட்டாளர் போன்று சமூக அநீதிகளிற்கு எதிராக கருத்து தெரிவித்தவேளை அவர் கேலி செய்யப்பட்டார்.
எனினும் இலங்கையின் பிரதமராவேன் என ஹரிணி ஒருபோதும் எண்ணவில்லை.
கொழும்பின் உயர்குழாமை சேர்ந்த குடும்பத்தின் இளையவரான 55 வயதான ஹரிணி இலங்கையின் 16 வது பிரதமராக பதவிபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் அவர்.
பிஷப் கல்லூரியின் பழைய மாணவியான அவர் இளவயதிலேயே அநீதிக்கு எதிராக குரல்கொடுத்தவர். அது தனது தந்தையிடமி;ருந்து சுவீகரித்துக்கொண்ட விடயம் என அவர் கருதுகின்றார்.
1990 இல் சமூக சுகாதார உத்தியோகத்தராக பணியாற்ற ஆரம்பித்தவேளை யுத்தத்தினால் பாதி;க்கப்பட்ட – எயி;ட்சினால் பாதிக்கப்பட்ட – புறக்கணிக்கப்பட்ட பெண்கள் மத்தியில் அவர் பணியாற்றினார்.
இது அவர் சமூகத்தின் பலதரப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ளும் நிலையை ஏற்படுத்தியது,தொழில்சார் வல்லுனர்கள்முதல் கல்வியறிவற்றவர்கள் வரை,வறியவர்கள் முதல் செல்வந்தர்கள் வரை,உயர் குழாத்தினர் முதல் மிகவும் வறுமையி;ல் உள்ளவர்கள் என பலதரப்பட்டவர்களை எதிர்கொண்டார்.
எனக்கு குழந்தையில்லாத போதிலும் நான் முழு சமூகத்திற்குமான தாய், என அவர் சமீபத்தில் ஹரி தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார்.
அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஒரு சீர்திருத்தவாதியாக,உரிமை செயற்பாட்டாளராக,புத்திஜீவியாக செயற்பட்டு வந்துள்ளார்.
1960 இல் தனது முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த உலகின் பழமையான ஜனநாயகத்தின் மூன்றாவது பெண் பிரதமர் இவர்.
இலங்கையின் முதலாவது பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க முதல் பிரதமர் எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்கவின் மனைவி, இரண்டாவது பிரதமர் அவரின் மகள்.
2020 இல் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க்கும் வரை ஹரிணிக்கு அரசியல் பின்னணி எதுவும் இருக்கவில்லை.
அரசசார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்
ஹரிணி அமரசூரிய தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த பின்னர் அரசசார்பற்ற அமைப்பொன்றில் சமூக சுகாதார பணியாளராக பணிபுரிந்தார் அதன் பின்னர் ஒருவருடம் கெயர் அமைப்பில் பணியாற்றினார்.
அதன் பின்னர் அவர் சுயாதீன ஆராய்ச்சியாளராக மாறினார்,சமூக மானுடவியலில் ஆர்வம்கொண்டிருந்த அவர் பின்னர் எடின்பேர்க் பல்கலைகழகத்தில் தனது கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்தார்.
எனக்கு வர்த்தகத்தில் ஈடுபடும் திறமையில்லை என்னிடம் வர்த்தகம் இல்லை என அவர் தெரிவிக்கின்றார்.
தனது அரசியல்வாழ்க்கை காரணமாக உறங்குவதற்கான நேரத்தை இழந்தது குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கையை இழந்தது குறித்தும் கவலைப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.
நான் தனிமையில் அதிக நேரத்தை செலவிட விரும்பும் ஒருவர் எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்கின்றார் அவர்.
இலங்கையின் தொழில்சார் வல்லுனர்கள் மத்திய தரவர்க்கத்தினரின் ஆதரவு ஜேவிபிக்கு கிடைப்பதற்கான முக்கிய திருப்பு முறை ஹரிணி என்கின்றனர் ஆய்வாளர்கள்.
1971- 88- 89 இரத்தக்களறி மிக்க கிளர்ச்சிகளில் ஈடுபட்ட ஜேவிபியை விட தேசிய மக்கள் சக்தியை அதிகளவு நம்பத்தொடங்கினார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஜேவிபிக்கான மாற்றத்தை ஏற்படுத்தியவர் இவர் என பலர் கருதுகின்றனர்.ஜேவிபியின் தோற்றத்தை இடதுசாரி மார்க்சிச கட்சி என்பதிலிருந்து சீர்திருத்த முற்போக்கு குழுவாக மாற்றினார்.
அவரது ஆங்கில சிங்கள புலமை இதற்கு உதவியது
சிறந்த விதத்தில் உரையாற்றும் திறன் கொண்ட ஹரிணி ஜேவிபியின் நிர்வாக திறன் குறித்து வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியவேளை இவ்வாறு பதிலளித்தார்
‘நிச்சயமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளும் அனுபவம் எங்களிற்கு இல்லை,நாட்டை கட்டியெழுப்புவதில் அனுபவத்தை பெறுவோம் என அவர் தெரிவித்தார்.