பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2 – தாண்டவம்’

போயபதி சீனு – பாலகிருஷ்ணா இணையும் ‘அகண்டா 2 – தாண்டவம்’ படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

போயபதி சீனு இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த படம் ‘அகண்டா’. இதில் ப்ரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். 2021-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இந்தப் படம் வெளியானது.

2021-ம் ஆண்டு அதிக வசூல் செய்த தெலுங்குப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இதன் பின்னணி இசை, ஆக்‌ஷன் காட்சிகள் என வெகுவாக பேசப்பட்டன. ஓடிடியில் அமோக வரவேற்பினைப் பெற்றது.

இந்த மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

ஆனால், போயபதி சீனு – பாலகிருஷ்ணா இருவருமே வெவ்வேறு படங்களில் பணிபுரிந்து வந்தார்கள்.

தற்போது இருவரும் இணையும் ‘அகண்டா 2 – தாண்டவம்’ படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

Related posts