தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறிய

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் உட்பட 1040 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பில் பொலிஸாரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இதில் 900க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், பல அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பல தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 6ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. அறிக்கைகளை சமர்பிக்கத் தவறி சட்ட நடவடிக்கைக்கு முகம் கொடுக்கும் வேட்பாளர்கள் எதிர்காலத்தில் மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஏழு வேட்பாளர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts