‘மதகஜராஜா’ படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியின் போது கைகள் நடுங்கி கொண்டே மேடையில் பேசிய விஷாலின் உடல்நிலையை கண்டு ரசிகர் அதிர்ச்சி அடைந்தனர்.
‘மதகஜராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் வருகிற12-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் விஷால், சுந்தர் சி, குஷ்பு மற்றும் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் விஷால் பேசிய போது மைக்கை பிடிக்க முடியாமல் கைகள் நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் பேசினார்.
கை நடுங்கி கொண்டே மேடையில் பேசிய விஷாலின் உடல்நிலையை கண்டு ரசிகர் அதிர்ச்சி அடைந்தனர். ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பினர்.
அந்த நிகழ்ச்சியில் விஷால் பேசிய போது மைக்கை பிடிக்க முடியாமல் கைகள் நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் பேசினார்.
ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பினர்.இந்த நிலையில் நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, “நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் சிகிச்சை மற்றும் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்”.