‘காஞ்சனா 4’ படத்தில் பூஜா ஹெக்டே உடன் மற்றொரு நாயகியாக நோரா ஃபதேஹியும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
‘பென்ஸ்’ படப்பிடிப்பு தாமதமாவதால், தானே இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் லாரன்ஸ்.
இதில் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார். அவரைத் தொடர்ந்து மற்றொரு நாயகியாக நோரா ஃபதேஹி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
முந்தைய பாகங்கள் போலவே இப்படத்தினையும் அதிக பொருட்செலவில் படமாக்க லாரன்ஸ் திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படத்தினை கோல்டு மைன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படமாக இது அமைந்திருக்கிறது.
முன்னதாக சத்யஜோதி நிறுவனம் – கோல்டு மைன்ஸ் நிறுவனம் இணைந்துதான் லாரன்ஸ் நடிக்கவுள்ள ‘ஹன்டர்’ படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய ‘காஞ்சனா’ படங்கள் போலவே, இந்தப் பாகத்தையும் ஜனரஞ்சகமாக எழுதியிருக்கிறார் லாரன்ஸ்.
‘காஞ்சனா’ வரிசை படங்கள் யாவுமே தமிழக மக்களிடையே பிரபலமானவை. அது போலவே இப்படத்தையும் பிரம்மாண்டமாக வெளியிட லாரன்ஸ் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த ஆண்டு இறுதியில் வெளியிடலாம் என்ற முனைப்பில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
காஞ்சனா 4’-ல் மற்றொரு நாயகியாக நோரா
