“இசையின் மீதான கவனத்தால் என் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்” என்று இளையராஜா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இலங்கையில் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவர் மறைந்து ஓராண்டு ஆனதையொட்டி இளையராஜா ஆடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் இளையராஜா உருக்கமாக, “பவதாரிணி எங்களை விட்டுப் பிரிந்த பின்பு தான், அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது.
காரணம், என்னுடைய கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் என்னுடைய குழந்தைகளை நான் கவனிக்காமல் விட்டுவிட்டது எனக்கு இப்போது வேதனையை தருகிறது. இந்த வேதனை தான் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக இருக்கிறது என்று நினைக்கும்போது கொஞ்சம் எனக்கும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
பவதாரிணி பிறந்த நாளான பிப்ரவரி 12-ம் தேதி அவளுடைய திதி வருகிறது. அந்த இரண்டையும் சேர்த்து நினைவு நாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அதில் அனைத்து இசைக் கலைஞர்களும் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது மகள் பவதாரிணி ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
என் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன் இளையராஜா
