விஜய் 69’ படத் தலைப்பு ‘ஜன நாயகன்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 69’ படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இது அரசியல் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது போஸ்டரிலேயே தெரிகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது குடியரசு தினத்தினை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘லியோ’ மற்றும் ‘கோட்’ படப்பிடிப்புகளுக்கு இடையே ரசிகர்களுக்கு மத்தியில் வண்டியின் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி மிகவும் பிரபலம். அந்தப் புகைப்படப் பாணியில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளது படக்குழு.
கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். தீவிர அரசியலில் ஈடுபடும் முன்பு, விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ‘ஜன நாயகன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. மேலும், இப்படத்துக்கு ‘நாளைய தீர்ப்பு’ என்பது தான் தலைப்பு என்றெல்லாம் தகவல்கள் பரவின. இணையத்தில் பரவிய தகவல்கள் அனைத்தையும் பொய்யாக்கி இருக்கிறது படக்குழு.

Related posts