விஷால் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மதகஜராஜா’.
இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, நிதின் சத்யா, சோனு சூட், மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு உருவான இப்படம் 12 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்தது.
இந்நிலையில், ‘மதகஜராஜா’ 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 12-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
மேலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மதகஜராஜா திரைப்படம் தான் அதிக வசூலை வாரிக்குவித்துள்ளது.
அதாவது இப்படம் 15 நாட்களில் சுமார் ரூ.55 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டில் இப்படம் ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் வேட்டையில் ‘மதகஜராஜா’ திரைப்படம்
