இது பாகுபலி மாதிரியான படமல்ல, ஆனால்.

தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் படமாக எனது 50-வது படம் இருக்கும் என்று சிம்பு உறுதியாக தெரிவித்துள்ளார்.

தனது 50-வது படத்தினை தயாரித்து நாயகனாக நடிக்கவுள்ளார் சிம்பு. இப்படம் தொடர்பாக சிம்பு, “எனது 50-வது படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

அதனால் தான் இதே கெட்டப்பில் இருக்கிறேன். அது நல்லபடியாக வந்துவிட்டால் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதன் பட்ஜெட் என்பது மிகவும் பெரியது.

இப்போது ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் விற்பனை இறக்கத்தில் உள்ளது. அதனால் தான் நானே தயாரிப்பாளராகிவிட்டேன்.

இது பாகுபலி மாதிரியான படமல்ல. ஆனால் தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்.

இதன் படக்குழுவினர் யாருக்குமே இதுவரை ஒப்பந்தம் கூட போடவில்லை.

இதிலிருந்தே தமிழ் சினிமாவை எவ்வளவு காதல் கொண்டுள்ளார்கள் என்பது தெரியும். இந்தப் படம் நமது திரையுலக வாழ்வில் என்ன பண்ணப் போகிறது என்பதை பற்றி கவலைப்படவில்லை.

சரியாக போகவில்லை என்றால் என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை.

இப்படம் வெளிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பணிபுரியவுள்ளோம்.

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறேன், இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளேன்.

இது எனது கடமை. எனது ரசிகர்களுக்காக மட்டுமன்றி அனைத்து ரசிகர்களுக்காகவும் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார் சிம்பு.

சிம்புவின் 50-வது படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதனை சிம்பு தயாரிக்கவுள்ளார்.

நடிகர் சிம்பு தனது 50-வது படம் குறித்த அப்டேட்டை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிம்பு தயாரிக்கிறார்.

“இறைவனுக்கு நன்றி! Atman சினி ஆர்ட்ஸ் மூலமாக தயாரிப்பாளராக ஒரு புதிய பயணத்தில் நான் அடியெடுத்து வைக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனக்கும் தேசிங்கு பெரியசாமிக்கும் ட்ரீம் ப்ராஜக்டாக உள்ள படத்தை எனது 50-வது படமாக தொடங்குவதை விட வேறு எதுவும் சிறந்தது இல்லை.

இந்து எங்கள் நெஞ்சோடு கலந்து. இந்தப் புதிய முயற்சியை ஆவலோடு எதிர்நோக்கி உற்சாகமாக இருக்கிறேன்.

எப்போதும் போல உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்! நீங்க இல்லாமல் நான் இல்ல!” என சிம்பு தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

Related posts