சந்திரிகா டாண்டனுக்கு கிராமி விருது

சென்னையை பூர்​வீக​மாகக் கொண்ட சந்திரிகா டாண்​ட​னுக்கு கிராமி விருது வழங்​கப்​பட்​டுள்​ளது.

இசைத்​துறை​யில் சிறந்து விளங்​குபவர்​களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருது வழங்​கப்​பட்டு வருகிறது.

இசைத்​துறைக்கான உயர்ந்த விரு​தாகக் கருதப்​படும் இவ்விருது பாப், ராக்,நாட்டுப்புற இசை, ஜாஸ் என பல்வேறு இசைப்பிரிவு​களுக்கு வழங்​கப்​படு​கிறது.

இந்த ஆண்டுக்கான 67-வது கிராமி விருது விழா, கலிபோர்​னி​யா​வில் காட்டுத்​தீ​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்​சியாக லாஸ் ஏஞ்சல்​ஸில் நடைபெற்​றது.

அதில், அமெரிக்​காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகி சந்திரிகா டாண்டன் (71), தனது ‘திரிவேணி’ என்ற இசை ஆல்பத்​துக்காக ‘சிறந்த தற்கால இசை ஆல்பம்’ என்ற பிரி​வில் கிராமி விருதை வென்​றுள்​ளார்.

இந்த ஆல்பத்தை தென் ஆப்பிரிக்​காவைச் சேர்ந்த புல்​லாங்​குழல் இசைக்​கலைஞர் வாவ்ட்டர் கெலர்​மேன், ஜப்பானிய இசைக்​கலைஞர் எரு மாட்​சுமோட்டோ ஆகியோ​ருடன் இணைந்து உருவாக்கி​யுள்​ளார்.

7 பாடல்​களைக் கொண்ட இந்த ஆல்பம் இந்திய கிளாசிக் இசை,வேத மந்திரங்கள் கலந்து உருவாக்​கப்​பட்​டுள்​ளது. சந்திரிகா டாண்​டனுக்கு நியூ​யார்க்​கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வாழ்த்​து தெரி​வித்​துள்ளது.

சென்னை​யில் பிறந்த சந்திரிகா டாண்​டன், பெப்​சிகோ நிறு​வனத்​தின் ​முன்​னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்​திரா நூயி​யின் மூத்​த சகோதரி ஆவார்​.

Related posts