‘ஜன நாயகன்’ படத்தில் விஜய் உடன் இணையும் ஸ்ருதிஹாசன்!

ஜன நாயகன்’ படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

சென்னையில் ‘ஜன நாயகன்’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறது.

இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய காட்சிகளை வரும் வாரத்தில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் ‘ஜன நாயகன்’ படத்தினை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

இதில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள்.

இதன் பெரும்பாலான காட்சிகளை சென்னையிலேயே அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஏப்ரல் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

அக்டோபர் மாதம் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டாலும், தற்போது அந்த மாதத்தில் வெளியீடு இருக்காது என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது.

Related posts