நாட்டில் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் குரங்கு!

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல இடங்களில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக இன்று (09) முற்பகல் நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்தது.

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வௌியாகியிருந்தன.

பின்னர் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் செயற்பட்டு வந்த நிலையில், சில பகுதிகளுக்கு மாத்திரம் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தன.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

எனினும், இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts