திரை விமர்சனம்: தினசரி

மென்பொருள் துறையில் பணிபுரியும் சக்திவேலுக்கு (ஸ்ரீகாந்த்) பெண் பார்க்கிறார்கள். மணப்பெண் தன்னைவிட அதிக ஊதியம் பெறும் வேலையில் இருக்க வேண்டும் என்பது அவன் நிபந்தனை.
காரணம், பணம் மட்டுமே வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் என்பது அவன் கணக்கு, ஆனால், அமெரிக்காவில் பிறந்து, தமிழ்க் கலாச் சாரத்தின் மீது பற்றுகொண்டு குடும்பத் தலைவியாக மட்டும் இருக்க நினைக்கும் பெண் ஷிவானியை (சிந்தியா) தந்திரமாக அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இந்த முரண்களின் ஜோடி, வாழ்க்கையை அடுத்தகட்டம் நோக்கி எப்படி நகர்த்தினார்கள் என்பது கதை.
எல்லா காலத்துக்கும் அவசியமான கருத்தை முன்வைக்கும் திரைக்கதை, முழுவதும் உரையாடல்களின் வழியாகப் பயணிக்கிறது.
என்றபோதும், வீட்டுக்குள் நிகழும் காட்சிகள், வெளியிடங்களில் நிகழும் காட்சிகள் என மாறி மாறிக் கோர்த்துக் கொடுத்து சீரியல் தன்மையை வெகுவாகக் குறைத்திருக்கிறார் இதன் இயக்குநர் ஜி.சங்கர். குறிப்பாக வசனங்களைக் கச்சிதமாகவும் இயல்பாகவும் எழுதியிருக்கிறார்.
சக்திவேலின் கதாபாத்திரம் பணத்தைப் பெருக்கச் செய்யும் செயலும் அதன் விளைவும் பெரும் பாடம். ஆனால், நன்கு படித்து மென்பொருள் துறையில் கைநிறைய வருமானம் ஈட்டுபவர்களே பணத்தைக் குறுக்கு வழியில் பெருக்க நினைக்கும் பேராசையுடன் இருப்பார்கள் என்கிற சித்தரிப்பு கொஞ்சம் இடிக்கிறது.
சக்திவேல் பெண் பார்க்கும் படலத் தொடக்கக் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. அதேபோல், பொய்களின் வழியாக மகனின் திருமணத்தை முடிக்கப் பெற்றோரும் சகோதரியும் ஆடும் ஆட்டமும் திருமணத்துக்குப் பின் குட்டு உடையும் தருணமும் நகைச்சுவை தோரணமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சக்திவேலாக வரும் ஸ்ரீகாந்த், நடிப்பில் நன்றாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பெற்றோ ராக எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், அக்கா வாக வினோதினி, மனைவியாகச் சிந்தியா ஆகிய மு த ன் மை நடிகர்களின் தேர்வும் அவர்களின் நடிப் பும் நாடகத் தன்மை கொண்ட கதைக்கு உயிர்ப்பைக் கொடுத் திருக்கிறது. கூடுதல் பலமாக இளையராஜாவின் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன.
பணத்தை நோக்கிய ஓட்ட மாக மட்டுமே தினசரி வாழ்க்கை அமைந்தால், அதில் எந்த மகிழ்ச்சியும் அமைதியும் இருக்காது என் பதை அழுத்தமான சம்பவங் களின் வழியாக, சிரிக்க வைத்து பாடம் சொல்கிறது இப்படம்.

Related posts