விண்ணைத் தாண்டி வருவாயா’ ஒரு மேஜிக்கல் படம் என்று நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
2010-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
முழுக்க காதலை மையப்படுத்தி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
காதலர்கள் மத்தியில் பாடல்கள், காட்சியமைப்புகள் என இப்போதும் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சிம்பு வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் திவில் சிம்பு, “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
முதலில் வெளியாகும்போது பெரும் வெற்றியடைய வைத்தீர்கள்.
2-ம் வெளியீட்டிலும் நல்ல வரவேற்பு. அது ஒரு மேஜிக்கல் படம்.
கவுதம் மேனன் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், மனோஜ் பரமஹம்சா சார், த்ரிஷா மேடம், தயாரிப்பாளர் விடிவி கணேஷ் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி.
இப்போது எல்லாம் உள்ளுக்குள் ஜெஸ்ஸி… ஜெஸ்ஸி என சொல்வதில்லை. வேறு சொல்கிறது. விரைவில் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.