வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
இப் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், நேற்று (08) யாழ் . மத்திய கல்லூரி மைதானத்தில் மேற்படி கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது, அங்கிருந்த ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அசைத்த வண்ணம் காணப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்பது தென்னிந்திய நடிகர் விஜய்யினால் தமிழ்நாடு மாநிலத்தில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு சினிமா ரீதியாக கடல் கடந்த பல நாடுகளிலும் ரசிகர்கள் காணப்படும் நிலையில், அரசியல் ரீதியாவும் தற்போது ரசிகர்களின் ஆதரவு விஜய்க்கு கிடைத்து வருவதையும் அவ்வப்போது அவதானிக்க முடிகிறது.