அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் கடந்த 7-ம் தேதி வெளியான படம், ‘எமகாதகி’. இதில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா என பலர் நடித்துள்ளனர்.
ஸ்ரீனிவாச ராவ் ஜலகம் தயாரித்துள்ள இந்தப் படத்தை கணபதி ரெட்டி இணை தயாரிப்பு செய்துள்ளார்.
இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, நடிகை கீதா கைலாசம் கூறும்போது, “படம் முழுவதும் எனக்கான இடம் இருந்தது.
இந்தப் படத்தில் பணியாற்றிய 45 பேரும் ஒரு கிராமத்தில் ஒன்றாக இருந்தது, இனிமையான நினைவுகள்.
அந்த ஊர் மக்கள் நண்பர்களாகிவிட்டனர். படத்தின் நாயகி ரூபா, 35 நாட்கள் சடலமாகவே நடித்தார்.
அவரது அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம்.
இது என் படம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என மிகுந்த ஆவலுடன் இருந்தோம்.
இது இயக்குநரின் முதல் படம் போலவே இல்லை.
சிறப்பாக இயக்கியிருந்தார்” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.