கோட்’ 2-ம் பாகம் எப்போது? – வெங்கட்பிரபு பதில்

‘கோட்’ 2-ம் பாகம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு பதிலளித்துள்ளார்.

‘கோட்’ படத்தின் முடிவில் 2-ம் பாகத்தின் தொடக்கத்தோடு முடித்திருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு.

ஆனால், திரையுலகை விட்டு முழுநேர அரசியலுக்கு விஜய் செல்லவுள்ளதால் இப்படம் நடக்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.

சமீபத்தில் விழா ஒன்றில் ‘GOAT vs OG’ குறித்து வெங்கட்பிரபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக “2026-க்கு பின் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு.

2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பின் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியமால் இருக்கிறது.

மீண்டும் திரையுலகிற்கு திரும்பினால் ‘கோட் 2’ நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்பதை தான் சூசகமாக கூறியிருக்கிறார் வெங்கட்பிரபு.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘கோட்’. வெங்கட்பிரபு இயக்கிய இப்படத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

யுவன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் தமிழகத்தில் 100 கோடி ஷேர் தொகையாக வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

Related posts