நாங்கள் இருவரும் கணவன், மனைவி பந்தத்தில்

நாங்கள் இருவரும் கணவன், மனைவி பந்தத்தில் தான் இருக்கிறோம் என்று ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமான இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் விளங்கி வருகிறார்.
இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும் பல மொழிகளில் பல்வேறு ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நீர்ச்சத்து குறைவு காரணமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமான் விரைந்து குணம் பெற வேண்டும் என சாய்ரா பானு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், என்னை ஏ.ஆர். ரகுமானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
‘நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. நாங்கள் இருவரும் கணவன், மனைவி பந்தத்தில் தான் இருக்கிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், நாங்கள் பிரிந்து வாழ்கிறோம்.
நாங்கள் பிரிந்திருந்தாலும், அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
என்னை இனி யாரும் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts