சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
முழுக்க கல்லூரி பின்னணியில் இதன் கதையினை உருவாக்கி இருக்கிறார்.
தற்போது இதன் நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தின் மூலம் இணையத்தில் கொண்டாடப்பட்ட நாயகி கயாடு லோஹர்.
அவர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள பெரிய நாயகன் படம் இதுவாகும். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்.
இதில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
சாய் அபயங்கர் இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விரைவில் படக்குழுவினர் அறிவிப்புடன், படப்பிடிப்பினை தொடங்கவுள்ளது படக்குழு.
டிசம்பரில் இப்படத்தினை வெளியிடலாம் என்று இப்போதைக்கு படக்குழு முடிவு செய்திருக்கிறது.