தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கான 30 கோடி அமெரிக்க டாலர் உதவி தொகையை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வருடம் ஆகஸ்டில் டிரம்ப் புதிய தெற்காசிய கொள்கையை வெளியிட்டார். தீவிரவாத குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படியும் கேட்டு கொண்டார். இந்த நிலையில், இந்த வருடம் ஜனவரியில் பாகிஸ்தான் நாட்டுக்கான பாதுகாப்பு உதவிக்கு வழங்க இருந்த 115 கோடி அமெரிக்க டாலர் உதவி தொகை ரத்து செய்யப்பட்டது. இதற்கு ஆப்கானிஸ்தான் தலீபான் குழுக்கள் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் ஆகிய தீவிரவாத குழுக்களுக்கு புகலிடம் அளித்ததுடன் அவர்களுக்கு எதிராக எந்தவிட நடவடிக்கையையும் எடுக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது என காரணம் கூறப்பட்டது. இதனால் அமெரிக்கா…
Author: mithila
50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட்
எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும் கொஞ்சம் நன்றாகப் பண்ணியிருக்கலாமோ என்று நினைத்தால், அதை அப்போதே சரிசெய்துவிட வேண்டும்; எங்கேயும் குறை வந்துவிடக் கூடாது என இயக்குநர் பாலா அடிக்கடி சொல்வார். அதனால், குறும்படங்கள் என்றாலும், அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப் போகிறது. நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ, இல்லையோ… இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். ‘கம்பளிப்பூச்சி’ குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளதைப்போல… அதைப் பார்த்து ஒருசில நபர்கள் மனம் திருந்தினாலே, அது நமக்குக் கிடைத்த வெற்றிதான். பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லிக் கேட்காதவர்கள், சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால், அதுதான் சினிமாவின் பலம். இன்று 8 கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால், படம்…
கொல்ஸ்ரபோ நகரில் சிறப்பு ஆராதனை
அலைகள் உலகச் செய்திகள் 01.09.2018 சனிக்கிழமை
ரியூப்தமிழ் இலங்கையில் முதலாவது ஆண்டு
இந்தியன்–2 படத்தில் கமல்ஹாசன் வேடங்களில் மாற்றம்?
கமல்ஹாசன் நடித்து 1996–ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன. படத்தை இயக்கும் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தில் முடிகிறது. எனவே இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த வாரம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. அரசியல் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு முழுமையாக படப்பிடிப்பில் கமல்ஹாசன் ஈடுபடுகிறார். இந்தியன்–2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று ஏற்கனவே அவர் கூறியுள்ளார். முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எதிர்ப்பதாக கதை இருந்தது. இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்கின்றனர். இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல். இந்தியன் படத்தில் தாத்தா…
பணம் கேட்டு குடும்பத்தினர் தொல்லை ஐஸ்வர்யா
எனது அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் பணம்தான் முக்கியம் என்று நடிகை ஐஸ்வர்யா கூறினார். ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா, பாயும் புலி, ஆறாது சினம், சத்திரியன், சமீபத்தில் திரைக்கு வந்த ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இப்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவர் தன்னிடம் பணம் கேட்டு குடும்பத்தினர் தொல்லை கொடுப்பதாக வருத்தப்பட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– ‘‘குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ் படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்தேன். அதன்பிறகு சொந்த ஊருக்கு செல்லவில்லை. எனது அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் பணம்தான் முக்கியம். என்மீது அவர்களுக்கு பாசம் கிடையாது. கொல்கத்தா செல்வதற்கு கையில் பணம் இருக்கிறது. அங்கு போனாலும் குடும்பத்தினரிடம் இருந்து அன்பு கிடைக்காது. அவர்கள் பணத்தில் மட்டுமே குறியாக…
மத்தியதரைக் கடலை நோக்கி விரையும் ரஷ்ய போர் கப்பல்கள்
ரஷ்யா மத்தியதரைக் கடலில் ஒரு டஜன் போர் கப்பல்களை குவித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு சிரிய யுத்தத்தில் ரஷ்யா தலையிட்டது தொடக்கம் ரஷ்யாவின் மிகப்பெரிய கடற்படை குவிப்பாக இது இருப்பதாக ரஷ்ய பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் நாட்டில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி பகுதியான வடக்கு இத்லிப் மாகாணத்தின் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக செய்தி வெளியாகி இருக்கும் நிலையிலேயே ரஷ்யாவின் படை குவிப்பு இடம்பெறுகிறது. மறுபுறம் சிரிய அரச படை மீது தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயாராகும் வகையில் மத்திய கிழக்கில், அமெரிக்கா படைகளை கட்டியெழுப்பி வருவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் அட்மிரல் க்ரிகொரோவிச் மற்றும் அட்மிரல் எஸ்ஸன் போர் கப்பல்கள் துருக்கியின் பொபொரஸ் நீரிணை ஊடாக கடந்த செவ்வாய்க்கிழமை…
இலங்கை – மியன்மார் உடன்படிக்கை மீள செயற்படுத்தப்படும்
இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான இணைந்த வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் செயற்படுத்தி இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை புதியதோர் பாதையில் முன்னெடுக்க இருநாடுகளினதும் அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர். வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் எனப்படும் ‘பிம்ஸ்டெக்’ (BIMSTEC) உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் மியன்மார் நாட்டின் ஜனாதிபதி வின் மைன்ட் (Win Myint) இற்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (30) முற்பகல் நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே மேற்படி விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கும் மியன்மாருக்குமிடையில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 1999 ஆம் ஆண்டு இந்த வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட மியன்மார் – இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது தலைவர்கள் விசேட கவனம் செலுத்தினர்.…
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ஈரான் முடிவு
மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையில் முறைப்பாடுகள் கூறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கச் செய்தது. ஆனால், ஈரான், தங்களிடம் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இருந்தபோதிலும், அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்கவில்லை என்றது. இருப்பினும், உலக நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டைன், சீனா, பிரான்ஸ், ரஷியா, ஜெர்மனி) விதித்த பொருளாதார தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அணு ஆயுதப் பரவல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக, ஈரான் அறிவித்தது. இதையடுத்து, ஈரானுக்கும், வளர்ச்சி அடைந்த ஆறு நாடுகளுக்கும் இடையே கடந்த 14-7-2015 அன்று அணு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஈரானில் யுரேனியத்தை செறியூட்டி, அணு குண்டாக மாற்ற பயன்படும் ‘சென்ட்ரிபியூஸ்’ எண்ணிக்கை மூன்றில்…