ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகினார்

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் பொது செயலாளர் பதவியில் இருந்து ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகியுள்ளார். இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் கொழும்பில் உள்ள இ.தொ.கா தலைமையகத்தில் இன்று (30) காலை இடம்பெற்றது. காங்கிரஸின் பொது செயலாளரும், தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடிய தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இதுவரை காலமும் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான், இன்று முதல் தலைவராக மட்டும் செயற்படவுள்ளார். அத்தோடு, புதிய பொது செயலாளராக அனுஷியா சிவராஜாவும், பிரதி பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு நீண்டகாலமாக திட்டம்

மகாவலி திட்டம் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாகவே திட்டமிட்டு இருந்து காமினி திஸநாயக்க அமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் அதன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராச தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று (28) காலை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் பங்கு பற்றி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், இந்த பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்த விடயம் அல்ல அமைச்சர் காமினி திஸநாயக்காவின் திட்டப்படி நாற்பதாயிரம் சிங்கள குடும்பங்களை முல்லைத்தீவில் குடியேற்றுவதுதான் அந்த ஆவணம் எங்களிடம் இருக்கின்றது ஒரு இலட்சம் ரூபா ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கும்…

இன்று வெளியாகும் அலைகள் உலக வலத்தில்..

மியன்மார் நாட்டில் வாழும் ஏழு இலட்சம் றோகிங்யா முஸ்லீம்களை அந்த நாட்டின் பௌத்த ஜிந்தா இராணுவம் விரட்டியடித்து, கொன்று தள்ளியது போர்க்குற்றம். இது குறித்து கடந்த திங்கள் வெளியான ஐ.நாவின் அறிக்கை, நேற்று கூடிய ஐ.நா பாதுகாப்பு சபையில் ஐ.நா செயலர் மியன்மார் மீது வைத்து சர்வதேச போர்க்குற்றச் சாட்டும் மனித படுகொலை விபரமும். மற்றைய நாடுகளுக்கும் இது சவாலாக மாறும்.. விபரம் காண கேட்டுப்பாருங்கள். பிரான்சிய அதிபருக்கு நேற்று டென்மார்க் மகாராணியார் வழங்கிய அதி ஆடம்பரமான விருந்துபசாரம். 182 பேர் அழைக்கப்பட்டார்கள், இவர்களுக்கான ஆடை வடிவமைப்பு, மண்டப அலங்காரம்.. பட்டை கிளப்பியது.. இதனால் சொல்லப்படும் செய்தி என்ன..? கேட்டுப்பாருங்கள்.. கூகுள் தேடுதளத்தில் ரம்ப் நியூஸ் என்று தேடினால் அமெரிக்க அதிபருக்கு எதிரான 96 வீதமான செய்திகளையே கூகுள் றோபோ எடுத்து வந்து நிறுத்துவது ஏன்..? கணவன்மார்…

திரிஷா, புதிய தோற்றத்துக்கு மாறினார்

தமிழ் பட கதாநாயகர்களில் சிலர் படத்துக்கு படம் தங்களை புதிய தோற்றத்துக்கு மாற்றிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட விரும்புகிறார்கள். இந்த முயற்சியில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். சிலர் தோல்வி அடைகிறார்கள். கதாநாயகர்களைப்போல் சில கதாநாயகிகளும் வித்தியாசமான கதைகளிலும், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறார்கள். இந்த பட்டியலில் புதுசாக இணைந்திருப்பவர், திரிஷா. இவர், ‘அரண்மனை,’ ‘நாயகி,’ ‘மோகினி’ ஆகிய படங்களில் பேய் வேடங்களில் நடித்து மிரள வைத்தார். ‘கொடி’ படத்தில், அரசியல்வாதியாக வில்லி வேடத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். அடுத்து இவர் நடித்து, ‘96’ என்ற படம் திரைக்கு வர இருக்கிறது. இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். திரிஷாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம், இது. இதனால், ‘96’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய…

என் இதயம் உடைந்து விட்டது முன்னாள் காதலி

பிரியங்கா சோப்ராவுக்கு 36 வயது ஆகிறது. நிக்ஜோனாசுக்கு 25 வயது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வைரமோதிரத்தை நிக் ஜோனாஸ் அணிவித்தார். இப்போது மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது நிக் ஜோனாஸ் பெற்றோர் பிரியங்காவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வைர பிரேஸ்லெட்டை பரிசாக அளித்துள்ளனர். இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி நிக்ஜோனாசின் முன்னாள் காதலியும் ஆஸ்திரேலிய பாடகியுமான டெல்டா கூட்ரெம்முக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரும் நிக்ஜோனாசும் 2011-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். நிக்ஜோனாசை சமரசப்படுத்த டெல்டா கூட்ரெம் முயற்சித்தபோது பிரியங்கா சோப்ராவுடன் காதல் ஏற்பட்டு விட்டது. இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கும் நிக்ஜோனாசுக்கும் சில…